(பா.ருத்ரகுமார்)

இனிவரும் காலங்களில் வெள்ளப்பாதிப்புகளை கட்டுப்படுத்த விசேட வடிகாலமைப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக மேல்மாகாண மற்றும் பெருநகர் அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வு காணி மீட்பு சபையில் இன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

வெள்ளப்பாதிப்புக்களினால் மேல்மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கான பிரதான காரணம் முறையற்ற வடிகாலமைப்புத் திட்டமும் தாழ்நிலங்களில் மண்மேடுகளை நிரப்பி குடியிருப்புகளை அமைத்தமையுமே ஆகும். எனவே கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தில் விசேட வடிகாலமைப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார்.