(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய உளவுத் துறையின் பணிப்பாளராக, முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  பிரிகேடியர் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் இதுவரை அந்த பதவியில் இருந்து வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு அந்த பதவி இல்லாமல் போயுள்ளதால் அவர் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக  மாற்றம் அடைந்துள்ளார். 

தேசிய உளவுத்துறை பணிப்பாளர் பதவி இல்லாமல் போனதையடுத்து அவர் இவ்வாறு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட பொலிஸ் அதிகாரியாக கணக்கில் கொள்ளப்படுவதாகவும், அது இடமாற்றம் அல்ல எனவும் பொலிஸ் ஆணைக் குழு தகவல்கள் தெரிவித்தன.