(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாள் இன்றாகும்.

இன்றைய நாளில் காலையில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை அணி மூன்று தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

ஆர்ஷிகாவுக்கு வெள்ளி

நேபாளத்தின் பொக்காரா நகரில் நடைபெற்று வரும் பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீராங்கனை ஆர்ஷிகா பாஸ்கர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் மற்றும் கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 100 கிலோகிராம் உள்ளடங்கலாக 170 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

இந்தப் பதக்கமானது ஆர்ஷிகா வெல்லும் முதலாவது சர்வதேச பதக்கம் இதுவென்பது சிறப்பம்சமாகும். 

இந்தப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், நோபாளம் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டது.

மேலும் ஆண்ளுக்கான 67  கிலோ கிராம் எடைப் பிரிவில் சதுரங்க லக்மாகல் வெள்ளிப் பத்ககம் வெல்ல, 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் நதீஷானி ராஜபக்ஷ வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சாதனை நிகழ்த்திய இலங்கை

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியை இலங்கை அணி வீரர்கள் 39.14 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். 

இதற்கு முன்னர் 2004 ஆம் பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்திய அணி 39.41 செக்கன்களில் ஓடிமுடித்த சிறந்தப் பெரிதி நேரத்தை முறியடித்தே இலங்கை அணி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப்போட்டியில் இலங்கைப் பெண்கள் அணி 44.89 செக்கன்களில் பந்தயத் தூர்த்தை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. 

இதேவேளை பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நிலானி ரத்னநாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார். 

அவர் பந்தயத் தூரத்தை 16 நிமிடங்கள 55.18 செக்கன்களில் நிறைவு செய்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இவர் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

போட்டிகளின் ஆரம்ப நாளன்று பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டி நிலானி ரத்நாயக்க மெய்வல்லுநனரில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்திருந்ததோடு தனது முதல் தங்கத்தையும் வென்றெடுத்தார்.

குண்டு எறிதலில் வெள்ளி

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தாரிகா குமுதும் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுக்க ஆண்கள் பிரிவில் குண்டு எறிதலில் பங்கேற்ற சமித் மதுஷங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

அதேவேளை இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மிற்றர் ஓட்டப் போட்டியில் மாற்று வீரராககள் களமிறங்கிய சண்முகேஷ்வரனுக்கு பதக்கம் ஒன்றை வெல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. 

ஆனால் இவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் பேர்டடியில் வெள்ளிப் பதக்கம் வென்றெடுத்தர்ர என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பெண்களுக்கான 400 மிற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை கௌஷல்யா மது வெள்ளி பதக்கம் வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 1.00.40 செக்கன்களில் ஓடி முடிக்க, பாகிஸ்தான் வீராங்கனை 1.00.35 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

இறுதியில் மோதிய இரண்டு இலங்கை அணிகள்

பட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சுவாரஷ்யமான முறையில் இலங்கை அணிகள் இரண்டு இறுதிப்போட்டியில் மோதியுள்ளன. 

அதனால் இதில் எந்த அணி வென்றாலும் இலங்கைக்குத்தான் தங்கம் என்றநிலையில் திலினி மற்றும் கவிந்தி ஜோடி 2-0 என்ற அடிப்படையில் மற்றொரு இலங்கை இரட்டையர்களான அசினி மற்றும் உபுலி ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. 

ஆக மொத்ததில் தங்கமும் வெள்ளியும் இலங்கைக்கே சொந்தமானது. ஒரே நாட்டு அணிகள் இறுதிப் பொட்டியில் மோதியது இது முதல்முறை என்பதும் விசே அம்சமாகும்.

இதேவளை ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் டயஸ் அங்கொட மற்றும் தரிந்து ஜோடி இந்திய இரட்டையரை 2-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.