யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் மழை நீர்த்தேங்கியுள்ளதாகவும்,  மழை நீர் வழிந்தோடமுடியாத நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளமையால் இத்தகைய நிலைகள் தொடர்வதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடமுடியாத நிலையில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அங்கு வாழும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இப்பகுதிகளில் வடிகால்கள் சீரானமுறையில் அமைக்கப்படாததன் காரணமாகத்தான் மழைநீர் வழிந்தோடமுடியாத நிலையில் தேக்கம் ஏற்படுகின்றது.

நீண்டகாலமாகவே இப்பிரச்சினை எழுந்துவரும் நிலையில் நிரந்தரமான கால்வாய் அமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையினால் இப்பிரச்சினை தொடர் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

தேங்கிநிற்கும் பகுதிகளில் உள்ள நீரை அகற்றிவிடுவதற்குத் தனியார் காணிகள் பயன்படுத்தப்படுவதால் தனியார்கள் கட்டடங்கள் கட்டும் நிலை காணப்படுவதால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடத்திலும் இத்தகைய நிலை ஏற்படும் போது தனியார் காணிகளில் அமையப்படுகின்ற கட்டங்களை உடைத்தே தண்ணீரை வெளியேற்றவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இம்முறையும் இத்தகைய நிலை ஏற்பட்டதால் தனியார்கள் குறித்த பகுதியை உடைப்பதற்கு அனுமதிவழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு நிரந்தரமான தீர்வை காணுமாறும் அவர்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் எவையும் நடவடிக்கை எடுக்காமையினால் என்ன செய்வது என்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள்.

குறித்த நிலைமைகள் தொடர்பில் மாநகர சபை முதல்வரைத் தொடர்புகொண்ட போது அவர் கொழும்பில் நிற்பதாகத்

தெரிவித்தார்கள். யாரிடம் சென்று இதற்கான தீர்வை பெற்றுக்கொள்வது என்ற நிலையில் மக்கள் அங்கலாய்க்கின்றார்கள் மாநகர சபையின் ஒரு சில உறுப்பினர்கள் முயற்சிகள் எடுத்தாலும் ஏனைய சில உறுப்பினர்கள் குறித் பகுதிக்கு வருதற்கே தயக்கம் காட்டுகின்றார்கள். இவ்வாறான நிலையில் அரச அதிகாரிகளும் என்ன செய்வது என்ற நிலையில் திண்டாடுகின்றார்கள். பாதிக்கப்பட்ட சிலர் அத்துமீறித்தன்னும் அதனை உடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டாடும் வேண்டுமென்றே பிரச்சினைகள் உண்டாக்குவதாகக்கூறி வருகின்றார்கள்.