கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு 10 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11 மற்றும் 13 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு நீர் குழாயில் ஏற்பட்ட கிசிவினால் பழைய அவிசாவளை வீதி கொட்டிகாவத்தை பகுதிக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.