கல்முனையில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை

Published By: Daya

06 Dec, 2019 | 03:51 PM
image

கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகாலை முதல் மதியம் வரை அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார்   மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (06)  அதிகாலை முதல் மதியம் வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சுற்றுவட்டம், நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத்திடீர் சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன்போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திர மின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாகச் செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்குப் போக்குவரத்து பொலிஸாரினால்  விளக்கமளிக்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது  அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை  பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் இணைந்து முக்கிய சந்திகள பிரதான  வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும்  போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்குச் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இருந்தும் வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை தொடர்பில் போதிய அறிவின்மை தொடர்பாகக் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஊடகவியலாளரிடம் குறிப்பிட்டதுடன் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10