சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில்  டிரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகின்றது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 அதில் முதல் இடத்தில் இந்தியாவின் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார்.

உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் சுந்தர் பிச்சை.

இவரின் பொறுப்பில் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதற்கு அடுத்த நிலையில், இந்தியாவின் திருவண்ணாமலையில் பிறந்து ஆன்மிக வாழ்க்கையில் சேவை செய்வதாக கூறி வரும் பிரபல சாமியார் நித்யானந்தா உள்ளார்.

இவர் வித்தியாசமான முறையில் உலக டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார். ஆசிரம பெண்களை கொடுமைப்படுத்தியது, பாலியல் புகார், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் பிரபலமான நித்தியானந்தா, சில நாட்களாக கைலாசா என்ற தனி நாடு குறித்தும் அங்குள்ள முக்கிய விடயங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்களை தெரிவித்து வருகின்றார்.

இதையடுத்து மூன்றாவதாக, இந்தியாவின் மதுரையை பூர்வீகமாக கொண்டு சென்னையில் பொறியியலாளராக உள்ள சண்முக சுப்பிரமணியன், நிலவில் காணாமல்போன  சந்திராயன் - 2 விக்ரம் லாண்டரின் பாகங்களை நிலவின் மேற்பரப்பில்  கண்டுபிடித்ததாக நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசப்பட்டார்.

இவ்வாறு குறித்த 3 தமிழர்களும் இவ்வாறு சமூகவலைத்தளங்களில் டிரென்டிங் ஆகியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.