(எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கிடையில் கைதிகளை பரிமாற்றிக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய அரபு ராஜியத்தின் தூதுவர் அஹ்மத் அல்முல்லாஹ் நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வை இன்று நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையில் நீதிமன்ற துறையில் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.