சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வருடாவருடம் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் விழா இன்று  உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.  

வவுனியா மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகஸ்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவைகள் திணைக்களமும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் சேவையில் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து குறித்த  மாற்றுத் திறனாளிகள் விழாவை நடாத்தினர்.

மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை கலாச்சார நிகழ்வுகள் வினாவிடைப் போட்டிகளெனப் பல அரங்கு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.எம் கனீபா, மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம், வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா, உளநல வைத்தியர்,சி.சுதாகரன், எனப் பலரும் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளைக் கௌரவப்படுத்தினர்.