(எம்.மனோ­சித்ரா)

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ரஷ்­யாவின் உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரிகள் குழு  கடந்த புதன்­கி­ழமை இலங்­கையின் கிழக்கு கடற்­படை கட்­டளைத் தலை­மை­ய­கத்­துக்கு விஜயம் செய்­துள்­ளது.  

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ரஷ்ய இரா­ணு­வத்தின் ஜெரூ­சலேம் பாது­காப்புக் கல்­லூ­ரியின் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் அன்ரோய் இலனிக் உள்­ளிட்ட குழு­வி­னரே இவ்­வாறு கிழக்கு கடற்­படை கட்­டளைத் தலை­மை­ய­கத்­திற்குச் சென்­றுள்­ளனர்.

இக்குழு­வினர் இலங்­கையின் கிழக்கு கடற்­படை கட்­டளைத் தள­பதி ரியர் அட்­மிரல் மெரில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

 அத்­தோடு ரஷ்ய இரா­ணு­வத்­தினால் சிரி­யாவில் நடத்­தப்­படும் பயங்­க­ர­வாத ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து மேஜர் ஜெனரல் அன்ரோய் இலனிக் தலை­மையில் திரு­கோ­ண­மலை அட்­மிரல் வசந்த கரன்­னா­கொட கேட்போர் கூடத்தில் நிகழ்­வொன்றும் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.