யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 118 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாகவே வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான உதவிகளை பருத்தித்துறை பிரதேச செயலகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாகப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தெண்டைமானாறு வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக தொண்டைமானாறு கடலேரி வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.