மிளகு, பாக்கு, கறுவாப்பட்டை, சாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கரம்பு போன்ற மசாலாப் பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதை தடை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி இன்று இரவு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.