இலங்கை அணியின் இளம் வீரர் குசல்மெண்டிசினை உலக தரம் வாய்ந்த வீரராக மாற்றுவதே தனது வெற்றியிலக்கு என  இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கைஅணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி நான் எனது பங்களிப்பைவழங்கியுள்ளேன்  என தெரிவித்துள்ள மிக்கி ஆர்தர் அதன் தொடர்ச்சி இங்கே தொடரும் நாங்கள் வெற்றிகளை பெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

குசல் மென்டினை உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக மாற்றுவதே  அந்த வெற்றியாக அமையும், எனவும் குறிப்பிட்டுள்ள மிக்கி ஆர்தர்  லகுரு குமாரவை தலைசிறந்த வீரராக மாற்றுவதும் தனது இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீரர்கள் தங்கள் திறமைகளில் நம்பிக்கை உடையவர்களாக மாறி  மிகச்சிறந்த வீரர்களாக மாறவேண்டும் அது குறித்தே நான் கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் இது இறுதியில் அணியின் வெற்றிக்கும் அணி சிறப்பாக விளையாடுவதற்கும் வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான இரகசியம் கடுமையான உழைப்பு,பயிற்சிக்காக மைதானத்திற்கு செல்லும்வேளை நாங்கள் கடுமையாக பாடுபடவேண்டும், கடுமையாக பயிற்சி எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எவ்வளவு தீவிரமாக பயிற்சி செய்கின்றீர்களோ அதுவே உங்களை சிறந்த நிலைமைக்கு இட்டுச்செல்லும், அந்த தீவிர தன்மை எப்போதும் காணப்படவேண்டும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியில் என்னை கவர்ந்த விடயம் வீரர்களிடம் உள்ள திறமையே என குறிப்பிட்டுள்ள மிக்கி ஆர்தர் இதுவே  ஊக்கத்தை அளிக்கின்ற விடயம் இங்கு மிகச்சிறந்த திறமையான வீரர்கள் உள்ளனர்.

அடுத்த எட்டு மாதங்களில் ரி20 உலககிண்ணப்போட்டிகளில் வெற்றியளிக்ககூடிய முறையினை இனம்கண்டுஉருவாக்குவதே எனது நோக்கம்எனவும் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.