திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவ வீரரொருவரின் சடலமொன்று இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர் 35 வயதுடைய தம்பலகாமம் - 96 ஆம் கட்டை திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த ஐயந்த கொடிகார என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை இராணுவத்தின் 22 ஆவது படைப்பிரிவில் கடமையாற்றும் இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற நிலையிலேயே அவர் அரச மர சந்தியில் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலேயே காணப்படுவதாகவும் விசாரணை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.