(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இன்று காலை நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இலங்கை அணி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றெடுத்தது. 

இதில் ஆண்களுக்கான 100 x 4 அஞ்சலோட்டப் போட்டியிலும், பெண்களுக்கான 100 x 4 அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை தங்கத்தை சுவீகரித்தது.

அதேவேளை நடைபெற்ற பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் நிலானி ரத்னாயக்க தங்கப்பதக்கத்தை வென்று இந்தப் போட்டிப் பிரிவில் தனது இரண்டாவது தங்கத்தை வென்றெடுத்தார். 

இதற்கு முன்னர் 1500 மீற்றர் ஓட்டப் பேர்டடியில் நிலான தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.