பெளத்த பிக்குகளை அவமதித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என திரி நிக்காயக என்ற இளம் பெளத்த பிக்குகள் சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளது.

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கே வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என இவர்கள் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.