சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தெரிவித்தார்.

இந்த அறிவித்தல் சகல பிரத்தியேக வகுப்பு நிலையங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரையான காலப்பகுதில் மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 245 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மூதூர் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதேவேலை வீடுகள் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.