விஜித ஹேரத்திற்கு அரச வாகனம் எவ்வாறு வழங்கப்பட்டது?

Published By: Ponmalar

01 Jun, 2016 | 05:34 PM
image

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கு எந்த அடிப்படையில் அரச வாகனமொன்றை வழங்க முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனம் எவ்வாறு விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டதென உரிய அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தினை இவர் முன்வைத்துள்ளார்.

குறித்த அரச வாகனம் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தின் சாரதி ஏன் வாகனத்திற்குள் இருக்கவில்லை என்ற கேள்விக்கு  பதிலளிக்கவேண்டும்.

அதுமாத்திரமின்றி விபத்தின் மூலம் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமாயின் பிணையில் வருவது கிட்டத்தட்ட கடினமான விடயமாகும்.

தனக்கு தெரிந்து 'நபரொருவர் அரசுக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றிற்கு கல்லால் தாக்கியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்" எனினும் விஜித ஹேரத் சுலபமாக பிணைப் பெற்றுக்கொண்டார் என சுட்டிக்காட்டினார்.

கடந்த 30 ஆம் திகதி விஜித ஹேரத் செலுத்திய வாகனம் ராஜகிரிய பகுதியில் தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக பாடலி...

2026-08-11 06:10:23
news-image

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

2026-08-11 05:27:31
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு...

2026-08-10 14:02:40
news-image

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது...

2026-08-10 16:44:28
news-image

சாகர காரியவசம் கைது செய்யப்படுவார் என...

2026-08-10 17:22:21
news-image

நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் உண்மையான பின்னணியை...

2026-08-10 16:53:32
news-image

உயிர்த் தியாகம் செய்தேனும் 22ஆம் திருத்தத்தை...

2026-08-10 17:23:58
news-image

பிரதம நீதியரசருக்கு எதிராக அவதூறு ;...

2026-08-10 19:09:00
news-image

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை'...

2026-08-10 20:53:37
news-image

போதைப்பொருள் பரிசோதனைக்கு  அதிநவீன நடமாடும் ஆய்வுகூட...

2026-08-10 20:52:11