இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், துடுப்பாட்டம் மற்றும் 'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், வேகப் பந்து பயிற்சியாளர், களத்தடுப்பு பயிற்சியாளர் மற்றும் அபிவிருத்தியாளர் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப் பயிற்சியாளர்

மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளருக்கான தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றார்.

51 வயதான தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆர்த்தர், தென்னாபிரிக்கா, (2005 முதல் 2010 வரை), அவுஸ்திரேலியா (2011 முதல் 2013 வரை) மற்றும் பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகளுக்கும் தலைமைப் பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார்.

துடுப்பாட்டம் /'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளர்

கிரேண்ட் ப்ளவர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் மற்றும் 'A' அணிக்கான தலைமைப் பயிற்சியாளருக்கான தனது கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்க்கவுள்ளார்.

48 வயதான சிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரா கிரேண்ட் ப்ளவர், சிம்பாப்வே (2010 முதல் 2014 வரை) மற்றும் பாகிஸ்தான் (2014 முதல் 2019 வரை) கிரிக்கெட் அணிகளின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக இருந்துள்ளார்.

வேகப் பந்து வீச்சுப் பயிற்சியாளர்

டேவிட் சேகர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சுப் பயிற்சியாளராக எதிர்வரும் 8 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.

டேவிட் சேகர் அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (2015 முதல் 2016 வரை) அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

களத்தடுப்பு பயிற்சியாளர்

ஷேன் மெக்டெர்மொட் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.

38 வயதான அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் மெக்டெர்மொட் கடந்த 02 ஆம் திகதி களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

தலைமை கிரிக்கெட் செயல்பாட்டு அதிகாரி

ஜெரோம் ஜெயரட்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை செயற்பாட்டு அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

கிரிக்கெட் அணியின் அபிவிருத்தியாளர் 

டிம் மெக்கஸ்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் அபிவிருத்தியாளராக நாளைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளார்.