9வது நாளாகவும் தொடரும் தோட்ட உத்தியோகஸ்தர்களின் போராட்டம்

Published By: Digital Desk 4

05 Dec, 2019 | 06:15 PM
image

ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பகுதியில் உள்ள 10 தோட்டங்களை சேர்ந்த 231 உத்தியோகஸ்தர்கள் கடந்த 8 தினங்களாக பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று 9 வது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

எது எவ்வாராயினும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்,  மேலும் இப்பகுதியில் உள்ள 8 தேயிலை தொழிற்சாலைகளிலிருந்தும் தேயிலை தூள் பொதி செய்யப்பட்டு விற்பனைக்காக நேற்று கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது. 

தோட்ட சேவையாளர்கள் தேயிலை பொதிகளை கொண்டு செல்வதை தடுக்க முற்பட்ட போதும் அது பலன் இல்லாது போய்விட்டதாக தெரிவித்துள்ளனர்,

மேலும் இன்று கொழும்பு தலைமை காரியாலயம் முன்பாக மஸ்கெலியா தலவாக்கலை, பதுளை,கேகலை போன்ற தோட்டங்களை  உள்ள்டக்கி 800க்கு மேற்பட்ட தோட்ட சேவையாளர்கள் மேற்கொள்ள இருந்த போராட்டத்தை முன்கூட்டியே கம்பனிகாரர்கள் தடுத்துள்ளதாகவும் பேச்சுவார்தைக்காக  தலைநகரில் உள்ள காரியாலயத்திற்கு அழைத்துள்ளதாகவும் இன்று  பேச்சு வார்த்தை இடம்பெற உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

25 சதவீத வேதனத்தை அடிப்படை சம்பளத்தில் இணைத்து தருமாறு கோரியே இந்த போராட்டம் 9 வது  நாளாகவும் மஸ்கெலியா, தலவாக்கலை, நமுனுகல, கேகலை போன்ற இடங்களில் அகிம்சை வழியில் இடம்பெற்று வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41