காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளைஞனுடன் வந்தவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.