மிருக வேட்டையாடுதலின் போது தவறுதலாக துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடல் உறுப்புக்களை பயன்படுத்தி மூன்று சிறுவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவின் தென் கரோலினாவில் இடம்பெற்றுள்ளது.

தென் கரோலினாவில் 'Orangeburg County' இல் கடந்த வியாழக்கிழமை கொல்டன் வில்லியம்ஸ் எனும் ஒன்பது வயதுடைய சிறுவன் ஒருவன், அவரது தந்தையுடன் முயல் வேட்டைக்காக சென்றுள்ளார்.

இதன்போது தவறுதலாக தந்தையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந் நிலையில் உயிரிழந்த கொல்டன் வில்லியம்ஸின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல்கள் தானம் செய்யப்பட்ட நிலையில், அதனைக் கொண்டு மூன்று சிறுவர்களை உயிராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொல்டன் வில்லியம்ஸின் தாத்தா வின்ஸ் ஃபுர்டிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை முகநூலில் தெரிவித்துள்ளார்.