மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன் ’என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணி ரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்தப்படத்தில் இதற்கு முன் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஜெயராம், லால் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த நட்சத்திர பட்டாளங்களுடன் தற்பொழுது லேட்டஸ்டாக திரிஷாவும் இணைந்திருக்கிறார்.

இதனிடையே இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ‘பேட்ட’ என்ற படம் மட்டும் வெளியாகி இருக்கிறது என்பதும், அவர் தற்பொழுது ராங்கி, கர்ஜனை, சுகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.