மன்னாரில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் மன்னார்  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மன்னார் நகரில் அமைந்துள்ள சின்னக்கடையில் வசிக்கும் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்ற மரியதாசன் டிவினியா (வயது 9) என்பவரே டெங்கு நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

முசலி மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற்கொண்ட விசாரனையில் இறந்த சிறுமிக்கு கடந்த 30 ஆம் திகதி காய்ச்சல் வந்ததாகவும் பின் முதலாம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் மருந்து எடுக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும். ஆனால் காய்ச்சல் விடாமையால் மீண்டும் 3 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலையில் சேர்த்து வைத்தியம் செய்யப்பட்டபோதும் சிகிச்சை பலனளிக்காமையால் குறித்த சிறுமி இன்று (05) வியாழன் அதிகாலை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.