பதுளை - பசறை வீதி மூடல்!

By R. Kalaichelvan

05 Dec, 2019 | 03:16 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்மேடு சரிந்து விழு அபாயம் இருப்பதன் காரணமாக மலையகத்தில் சில வீதிகள் மாலை 6 மணிக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, பசறை - லுணுகலை ஆகிய வீதிகள் மூடப்படவுள்ளன.

இந்நிலையில் நேற்றிலிருந்து  இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ் வீதியின் ஊடான 5 ஆம் கட்டையில் இருந்து லுனுகல வரையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு வாகன சாரதிகளை மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

பதுளை 2 ஆம் கட்டை வினித்தகம, வௌஸ்ஸ, 6 ஆம் கட்டை, வினித்தகம வரையிலான வீதியில் அதிகளவான வாகன நெரிசல் காணப்படுகின்றமையால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதி சீர் செய்யப்பட்டவுடன் வழமைக்கு திரும்புமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right