(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இன்று காலை வேளையிலேயே இலங்கை அணி தடகளப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றேடுத்தது.

அதேவேளை முப்பாய்ச்சலில் சவ்ரின் அஹமட் வெண்கலப் பதக்கத்தை வென்றேடுத்தார்,

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் ஹஸினி பிரபோதா தங்கத்தை வென்றெடுக்க இதன் வெள்ளிப் பதக்கத்தை விதுஸா வென்றார், 

அதேவேளை 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. இதில் பெண்கள் 400 மீற்றர் ஓட்டத்தில் டில்ஸி (0,53,40 செக்கன்) தங்கத்தை வென்றெடுக்க, 400 மீற்றர் ஆண்களுக்கான போட்டியில் அனுர தர்ஸன (46,69 செக்கன்) தங்கப்பதக்த்தை வெல்ல, லக்மால் பிரியஞ்சன் (46,79 செக்கன்) வெள்ளியை வென்றார்.

அதேவேளை பெண்களுக்கான முப்பாய்ச்சலில் ஹஸினி பிரபோதி 13,21 மீற்றர் நீளம் தாண்டி தங்கத்தை வென்றெடுக்க, விதுஸா 13,14 மீற்றர் நீளம் பாய்ந்து வெள்ளியை வென்றார்.

ஆண்களுக்கான முப்பாய்ச்சில் இந்தியா தங்கத்தையும் வெள்ளியையும் வென்றெடுக்க, 15,91 மீற்றர் பாய்ந்த சவ்ரின் அஹமட் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்,

100 மீற்றர் தடைத் தாண்டல் பெண்களுக்கான போட்டியில் 13,68 செக்கன்களில் ஓடி முடித்து லக்ஸிகா சுகந்தி தங்கத்தை வென்றார்.