அம்பாறை-அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஐந்தாம் கட்டையில் வைத்தியர்  ஒருவர் செலுத்திய கார் இன்று(05) குடை சாய்ந்து  விபத்துக்குள்ளானதில் குறித்த வைத்தியர் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.

 அம்பாறை வைத்தியசாலையிலிருந்து கடமையை முடித்துக்கொண்டு அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் குறித்த காரை ஓட்டி சென்ற வைத்தியர் சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். 

குறித்த விபத்து தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.