இந்தியாவின், ஆமதாபாத்தில் நிர்மாணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானதம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த மைதானம் ஒரு இலட்சம் இருக்கை வசதிகளை கொண்டதும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தை விட மிகப் பெரியதும் ஆகும்.

மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மைதானம் தயாராகி விடும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்தார் பட்டேல் பெயரிலான இந்த புதிய மைதானத்தில் மார்ச் மாதம் ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையே கண்காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.