தேர்தல் விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பினை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான 427 சட்டவிரோத கடிதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கடிதங்கள், அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சில கடிதங்கள் அமைச்சுக்களின் செயலாளர்களின் போலி கையொப்பங்களைக் கொண்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பாக  உடனடியாக விசாரணை நடத்தி, மூன்று வாரங்களுக்குள் முடிவுகளை தெரிவிக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும உத்தரவிட்டுள்ளார்.