பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்­சியாளராக இருந்த மிக்கி ஆர்தர், தற்­போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராகச் செயற்­பட்டு வந்தவர் இலங்­கையின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க. பெரும் எதிர்பார்ப்­போடு இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக ஹத்­து­ரு­சிங்க நிய­மிக்­கப்­பட்டார். 

ஆனாலும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் எதிர்­பார்த்­த­ளவு அவரின் பயிற்­சியின் கீழ் இலங்கை அணி சோபிக்­க­வில்லை.

இத­னை­ய­டுத்து நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படு­தோல்வி கண்டு தொட­ரி­லி­ருந்து வெளியே­றி­யது. 

இதன் பின்னர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை நீக்க நட­வ­டிக்கை எடுத்­தது இலங்கை கிரிக்கெட் நிறு­வனம். அதன்­ பி­றகு இடைக்­கால பயிற்­சியாள­ராக ருமேஷ் ரத்­நா­யக்க நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நிலையிலேயே மிக்கி ஆர்தர் தற்­போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்­தவர் மிக்கி ஆர்தர். இவ­ரது தலை­மையில் பாகிஸ்தான் ஐ.சி.சி. சம்­பி­யன்­ஷிப்பை வென்­றது. இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் முதல்­தர அணி என்ற இடத்தைப் பிடித்­தது. மேலும் குறிப்­பிடத்தகுந்த சில வெற்­றி­களைப் பெற்­றது.

ஆனால் இங்­கி­லாந்தில் நடை­பெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோச­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யது. இதனால் தலைமைப் பயிற்­சி­யாளர் பதவியிலிருந்து நீக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நியமிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இவ­ரது பத­விக்­காலம் இரண்டு ஆண்டுகளாகும். இலங்கை அணி ஏற்­க­னவே கிராண்ட் பிள­வரை துடுப்­பாட்ட பயிற்­சி­யா­ள­ரா­கவும், டேவிட் சாகரை பந்து வீச்சு பயிற்சியா­ள­ரா­கவும் நிய­மித்­துள்­ளது. எதிர்­வரும் 11ஆம் திகதி இலங்கை அணி பாகிஸ்­தா­னுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் விளையா­ட­வுள்­ளது. இந்தத் தொட­ரோடு இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் பத­வியை மிக்கி ஆர்­தர் ஏற்­க­வுள்ளார்.