ஊவா பொலிஸ் பிரதானியின் உதவியாளராக சி.ஐ.டி.யின் பணிப்பாளரான திசேரா  

05 Dec, 2019 | 11:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னணி விசாரணைகளை வழி நடத்தி வந்த நிலையில்  சி.ஐ.டி. பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்ட நிலையில்,  அவ்விசாரணை களை கையாண்ட உதவி பொலிஸ் அத்தியட்சரான பீ.எஸ். திசேரா நேற்று முதல் ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.  

சி.ஐ.டி.யின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக கருதப்பட்ட அவர்,  சமூக கொள்ளை மற்றும் விஷேட விசாரணைப் பிரிவு ஆகிய முக்கிய இரு பிரிவுகளை வழி நடாத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி வித்திய படுகொலை விவகாரம், ரத்துபஸ்வலவில்  தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, ஊடகவியலாளர் லசந்த படுகொலை, ஊடகவியலாளர்களான  கீத் நொயார், உபாலி தென்னகோன் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பிலான கருத்தடை விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்த விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவே கையாண்டார்.

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் வழி நடத்தலில்  இவ்விசாரணைகளை சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா குழு முன்னெடுத்த நிலையில், அந்த விசாரணைகளை நெறிப்படுத்தி அதற்கு தேவையான தலைமைத் துவத்தை உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவே வழங்கியிருந்தார்.  இந்நிலையிலேயே  கடந்த சனிக்கிழமை  இடமாற்றப்பட்டார்.

 இந்த இடமாற்றமானது பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதி  பெற்றுக்கொள்ளாமல் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று அந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டு, உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவால் இடமாற்றம் செய்யப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06