ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா விளைபொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் நகரசபையின்  ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில்  வவுனியா தமிழ்ச் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர் சுமந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,  மற்றும் வர்த்தகர்கள், சமூகசேவையாவார்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் திருவருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா  நகரசபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டபோதிலும் நகரசபை தலைவர் மற்றும் நகரசபையின் பல உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.