ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்றைய தினம் 3 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பிலும் கட்சி தலைமை குறித்தும் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு மேயர் இல்லத்தில் நேற்றிரவு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களின் கூட்டமும் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் இந்தக் கூட்டங்களின்போது கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.