நோயாளர்களின் காயங்களை குணமாக்கும் போது அவர்களுடன் சவாலான நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் இன்றைய கால கட்டத்தில் சிகிச்சையாளர்கள் காணப்படுகின்றனர்.

ஐரோப்பாவின் மருந்துப்பொருள் உற்பத்தியாளரான Octamed Healthcare Products Inc. என்பது அண்மையில் உள்நாட்டு சந்தையில் இந்த சிகிச்சையளிப்போரின் நலன் கருதி உயர் தரம் வாய்ந்த குறைந்த செலவீனத்திலமைந்த தீர்வுகளை அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம் காயங்களை குணமாக்கும் செயற்பாட்டை மேலும் இலகுவாக்கி நிர்வகித்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

Ceyoka பிரைவட் லிமிட்டெடின் சேர்ஜிகல் பிரிவின் தலைமை அதிகாரி இம்மானுவேல் முருகைய்யா கருத்து தெரிவிக்கையில்,

“எமது நோக்கம், தீர்வுகளை வழங்குவது மட்டுமல்ல, நோயாளர்களின் நலனை மேம்படுத்துவதுமாகும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட காயத்தை குணமாக்கும் தயாரிப்புத் தெரிவுகள், சிகிச்சையாளர்களுக்கும் நோயாளர்களுக்கும் உயர் தரம் வாய்ந்ததாகவும், சகாயமான விலையிலும் காணப்படுகின்றன” என்றார்.

உள்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தயாரிப்புகள் காயங்களை குணமாக்குகின்றன என்பது பரிசோதனை ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றில் surgical tapes, i.v.fixation dressings மற்றும் wound dressings போன்றன உள்ளடங்கியுள்ளன.

wound dressings இன் Octacare சேர்ஜிகல் டேப் வகைகள் மருத்துவ சாதனங்களின் பொருத்துகைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியன. இவற்றில் catheters, dressings, pads, tubings, swabs மற்றும் cannulas போன்றன அடங்கியுள்ளன. இவை நோயாளர்களின் சருமத்தில் மெதுவான அசைவை ஏற்படுவதற்கு உதவியாக அமைந்துள்ளன.

Microporous சேர்ஜிகல் டேப் என்பது உறுதியான பற்றிப்பிடிக்கும் திறன் கொண்டுள்ளதுடன், அகற்றும் போது ஒட்டிப் பிடிக்கும் தன்மை அற்றதாக அமைந்துள்ளது. உணர்திறன் வாய்ந்த சருமத்துக்கு மிகவும் பொருத்தமானது என்பதுடன், இது hypoallergenic மற்றும் x-ray எடுப்பதற்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

Octacare இன் வெளிப்படைத்தன்மையான சேர்ஜிகல் dressings காயங்கள் பட்ட இடங்களை இலகுவாக கண்காணிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளன. ஏனெனில் அவை தெளிவான கட்டமைப்பை கொண்டிருப்பதாகும்.

OctaCare இன் Elastic Non-woven dressing என்பது சகல விதமான சரும சிகிச்சைகளுக்கும் பொருத்தமானது.

சத்திரசிகிச்சைகளுக்கு பின்னரான காயங்களுக்கும் அறுவைச்சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட சருமத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமானது.

ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளர் எனும் வகையில், Octamed wound care solutions மூலமாக பரிபூரண தயாரிப்புகள் குறைந்த செலவில் உயர்ந்த தரத்தில் வழங்கப்படுகின்றன.

நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் மூலமாக தற்போது சுகாதாரபராமரிப்பு சந்தையில் காணப்படும் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன் மக்களின் சுகாதாரம் மற்றும் நாளாந்த வாழ்க்கைக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.