சிறார்களின் உளநலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு

05 Dec, 2019 | 11:30 AM
image

நமது சிந்தனைத்திறனைக் கட்டுப்படுத்துவதில் உடலின் தலைமைச் செயலகமான மூளைக்கு முக்கிய பங்குண்டு, ஒருவரின் சிந்தனைத்திறன் என்பது வயதிற்கேற்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. குழந்தைப்பருவத்தில் உள்ளவர்கள் விளையாட்டு, படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை விரிந்து செல்கிறது. அதேபோல் அவர்கள் பெரியவர்களானதும் தொழில், காதல், குடும்பம் என அவர்களின் அவர்களின் சிந்தனை இன்னும் விரிவடைகிறது.  

சிறார்களின் சிந்தனை திறனை மேம்படுத்தலில் பெற்றோர்களாகிய நமக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதாவது அவர்களை நாம் வழிநடத்துவதிலிருந்தும் நாம் அவர்களுடனும் மற்றும் ஏனையவர்களுடனும் நடந்துகொள்ளும் விதத்திலிருந்தும் அவர்கள் அனைத்து விடயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். சிறு பிள்ளைகளுக்கு தமது பெற்றோர்களே ஹீரோக்களாக தெரிவார்கள் அதனால் தமது பெற்றோர்களை போல் உடையணிய, கதைக்க, மற்றவர்களுடன் பழக என அனைத்தையும் அவர்களிடமிருந்து பார்த்து கற்றுக்கொள்கின்றனர்.

சிறு பிள்ளைகளின் சிந்தனை திறன் மற்றும் அவர்களது உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவது பெற்றோர்களின் கைகளிலே தங்கியுள்ளது. அவர்களின் உளநலத்தில் அக்கறை கொள்ளும் போது அவர்களின் சிந்தனை திறன் சீராக விருத்தியடைய வழிவகுக்கும். பெற்றோர் தமது பிள்ளையின் உளநலத்தில் கவனம் செலுத்த முக்கயமாக தேவைப்படுவது அவர்களது “நேரமே” ஆகும். 

பிள்ளைகளுக்கு நமது நேரத்தை செலவு செய்வதை தவிர நாம் மற்றைய அனைத்து செயற்பாடுகளையும் அவர்கள் கேட்காமலே செய்து விடுகின்றோம். உதாரணமாக அவர்களுக்கு தேவையான உணவு, உடை, பராமரிக்க வேலையாட்கள், தனியறை என எல்லாம் செய்து விட்டு நமது கடமை முடிந்தது போல் பாசாங்கு செய்கின்றோம். அதேபோல் பெற்றோர்களின் முரட்டுத்தனமான கண்டிப்பும் அச்சிறார்களின உள ரீதியான தாக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

உள ரீதியான தாக்கங்கள் அவர்கள் பெரியவர்களானதும் அவர்களின் ஆளுமை, புத்தாக்கம் மற்றும் சமூகமயமாதல் போன்றவற்றுக்கு தடைகளாக உருவெடுக்கும் நிலைமை உருவாகும். 

பெற்றோர் தமது பிள்ளையின் உளநலத்தில் கவனம் செலுத்த முக்கியமாக தேவைப்படுவது அவர்களது நேரம். எவற்றுக்கெல்லாம் நாம் எமது நேரங்களை செலவு செய்கின்றோம் உதாரணமாக ஒரு தளபாடம் வாங்க வேண்டியிருந்தால் பல கடைகளுக்கு ஏறி இறங்குவோம். ஒரு தளபாடத்துக்கே நாம் பல மணி நேரங்களை சில வேளையில் பல நாட்களை செலவு செய்கின்றோம். ஆனால் எமது பிள்ளைகளுடன் அமர்ந்து ஓரிரு வார்த்தைகளை பேச எமக்கு நேரம் கிடையாது. அதேபோல் தமது தொழிலின் அல்லது காரியாலய மிகுதி வேலைகளை செய்வதற்கென்று வீட்டில் ஓர் அறையினை ஒதுக்கும் எமக்கு தெரியவில்லை பிள்ளையுடன் ஒரு மணி நேரத்தை செலவு செய்வதற்குஇ இவைகளே பிள்ளைக்கும் பெற்றோருக்குமான இடைவெளிகளை அதிகரிக்க செய்யும். மேலும் இவ் இடைவெளி அவர்களது உள ரீதியான தாக்கங்களுக்கும் வழிவகுக்கும். 

எனவே, பெற்றோர் என்பவர்கள் அவர்களது உடல் ரீதியான தேவைகளை நிறைவு செய்வோர் மாத்திரமின்றி அவர்களுடன் இணைந்து தமது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி அவர்களது ஆளுமை, புத்தாக்கம், அறிவு, நற்பண்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஓர் தோழனாக மற்றும் தோழியாக மாற வேண்டும். அவ் மாற்றமே, அவர்கள் தமது விருப்பு வெறுப்புக்களை மனம்விட்டு வெளிப்படுத்தி பெற்றோருடன் சக தோழராக நெருங்கி பழகவும் சமூகத்துடன் ஒன்றித்து வாழவும் வழிவகுக்கும்.

ஓர் சிறந்த பிரஜையை உருவாக்கும் பொறுப்பு மற்றும் அடிப்படை அம்சங்கள் பெற்றோரிடமே காணப்படுகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அதனடிப்படையில் இன்றிலிருந்து எமது பிள்ளைகளுடன்  தமது வேலைப்பளுவிலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்களை சிறந்த உளநலம் சார்ந்த பிரஜைகளாக உருவாக்கி நாட்டுக்கும் அவர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-ருஜிக நித்தியானந்த ராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04