அண்மைக் காலங்களாக நாட்டில் பல பாகங்களிலும் டெங்கு நோய் ஏற்பட்டு மக்களின் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்ற நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் இதற்கு முன்னேற்பாடாகப் பற்றை காடுகளாக உள்ள உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் அரச காணிகள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் பொது இடங்களில் காணப்படுகின்ற நுளம்பு பெருகக்கூடிய இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து அளிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இந்நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனுக்கும் பிரதேச சுகாதார பணிமனைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் குறித்த பிரதேசங்கள் இனங்காணப்பட்டு டெங்கு நோய்த் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த துப்புரவு பணிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியன் சுரேன் மற்றும் உப தவிசாளர் கயன் உறுப்பினர்கள் ரமேஷ் வீரவாகுதேவர் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM