மண்சரிவு எச்சரிக்கை ! நுவரெலியாவில் 10 குடும்பங்கள் வெளியேற்றம்

Published By: Digital Desk 3

05 Dec, 2019 | 10:36 AM
image

நுவரெலியாவில் ராகலை பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அங்கிருந்து 10 குடும்பங்கள் நேற்றையதினம் (04.12.2019) வெளியேற்றப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் நேற்று மண்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் அப் பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருந்தது.

அத்துடன், இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பின் படி வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கு  அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலும் பகலில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09