கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு தன்னுடைய வீட்டில் இருந்து காட்டுவழியாக பயணித்த மாணவி ஒருவரை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடமான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி மஹிங்கணை கல்வி வலயத்திற்குட்பட்ட அராவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்கு நேற்று (04.12.2019) காலை சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரிதிமாலியந்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரலிய எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்திற்கு பிரதான வீதியில் இருந்து 3 கிலோ மீட்டர் அடர்ந்த காட்டு வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதை வழியாக குறித்த மாணவி பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த போது இவ்வாறு பாம்பு தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.