கற்பிட்டி கடற்படையால் நேற்று கற்பிட்டி, கிம்புல்பொக்க கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்து இன்று புத்தளம் கடற்தொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கற்பிட்டி கடற்படையினர் நேற்று மாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது  கற்பிட்டி, கிம்புல்பொக்க கடல் பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர்களை கடற்படையினர் கைது செய்யதனர்.

 இவர்களிடமிருந்து 03 டிங்கி படகுகள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 85 கிலோ கிராம் மீன் 165 கடல் அட்டைகள், 03 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுழியோடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டன. 

குறித்த சந்தேகநபர்கள் 25 வயதிலிருந்து மற்றும் 42 வயதுவரையுடைய கற்பிட்டி, முல்லைதிவு மற்றும் புத்தளம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறறு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகுகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள், பிடிக்கப்பட்ட மீன்கள் , கடல் அட்டைகள் பொதி மற்றும் சுழியோடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மெலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று புத்தளம் கடற்தொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.