தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல சுவிஸ் வேண்டுகோள்- அரசாங்கம் மறுப்பு

04 Dec, 2019 | 09:55 PM
image

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும்  சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிற்கு கொண்டு செல்வதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் அனுமதி கோரியதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்ணை மருத்துவசிகிச்சைக்காக அவரது குடும்பத்தினருடன் இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது,என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தூதரக பணியாளரை கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு சுவிஸ் அதிகாரிகள் முயன்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25 ம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது தூதுவரிடமிருந்தோ உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதனையும் பெறாத போதிலும் தூதுவர் வழங்கிய குறைந்தளவு தகவல்களை அடிப்படையாகவைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் சிறிதளவு கூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசியல்தலைமைத்துவத்தின் மீது சேற்றைவாரியிறைக்கும்,பொய்களையும் பிழையான தகவல்களையும் தெரிவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாக இதனை காண்கின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15