கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் ஏத்தாளை பகுதியில் ஜீப் வண்டியில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளாகியதில் 19 வயது இளைஞன் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

இதன் போது பொலிஸார் ஜீப் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர். 

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.