(செ.தேன்மொழி)

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் கட்சித் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்படப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தேர்தலின் போது வேட்பாளர்களை குறைப்பதற்காக கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பிலும் , தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெரிதும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் படுத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேஷன் ,ஜனசத்த பெரமுனவை சேர்ந்த  பத்தரமுல்ல சீலானந்த தேரர் , புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சாமிலா பெரேரா, தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , ஐக்கி சோஷலிச கட்சியை பிரதிநிதித்துவம் படுத்தி  ஸ்ரீதுங்க ஜயசூரிய , பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, சட்டதரணி சுனில் வட்டகல , ஒக்கோம ரஜவரு கட்சியை பிரதிநிதித்துவம் படுத்தி ஹர்தஷ அல்விஸ் , சிங்கள தீப ஜாதிக்க பெரமுனவின் செயலாளர் ஜயந்த லியனகே ஆகியோர் வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன்.

மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளதால் அது தொடர்பிலும் கலந்துரையாடினோம். இதன்போது ஆணையாளர் மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பில் கருத்து தெரிவித்தார். 

அதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். ஆளும் தரப்பினரிடமிருந்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் கலந்துரையாடினோம். இது தொடர்பான உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டோம் என அவர் தெரிவித்தார்.