பௌத்த மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை புறக்கணித்தமை குறித்து கவனம் செலுத்தப்படும் : நவீன் 

By R. Kalaichelvan

04 Dec, 2019 | 06:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள  அடிப்படை பிரச்சினைகளுக்கு  நாளை கூடவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தின் ஊடாக தீர்வு  முன்வைக்கப்படும். பௌத்த சிங்கள மக்கள்  நல்லாட்சி அரசாங்கத்தினை புறக்கணிப்பதற்கான காரணம் குறித்து  கவனம் செலுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக் தெரிவித்தார்.

 நெருக்கடி நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு கட்சியை பிளவுப்படுத்த எவராலும் முடியாது. கட்சியை   பலப்படுத்த அடிமட்டத்தில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தவும் தயார் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

தோல்வியை தொடர்ந்து ஒரு  தரப்பினரை மாத்திரம் குற்றவாளியாக்குவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.

பொதுஜன பெரமுனவின் வெற்றியை  சிங்கள பௌத்த வாக்குகளே தீர்மானித்துள்ளது. சிங்கள மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை முழுமையாக புறக்கணிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கட்சி என்ற ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் பௌத்த மத கோட்பாடுகளுக்கு ஆரம்பகாலம் தொடக்கம் முன்னுரிமை கொடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தை  அடிப்படையாகக் கொண்டு தற்போது  மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி எதிர்காலம் குறித்து தீர்க்கமான தீர்மானங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.  ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தினை போன்று  போட்டிகளின மத்தியில் தற்போது தீர்மானங்களை எடுக்க முடியாது.

எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து தீர்வு  காண்பதற்கான பாராளுமன்ற குழு கூட்டம் இன்று கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இதன்போது  அனைத்து பிரச்சினைகளுக்கும் அதாவது கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு  வழங்கப்படும்..

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான  மங்கள சமரவீர,  ரஞ்வசன் ராமநாயக்க ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

கட்சியின்  கொள்கைக்கும், பொது சட்டத்திற்கும் எதிராக செயற்பட்டவர்களுக்கு  ஒருபோதும் கட்சியில் இடம் கிடையாது. 

எமது நாட்டின் இறையாண்மைக்கு  சவால் விடுத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலே   இங்கிலாந்தின் பழமைமாத கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை  வெளியிட்டுள்ளது.

இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமையினை ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன் இரு நாடுகளின் நல்லுறவு குறித்தும் கவலையினை  தெரிவித்துக் கொள்வது அவசியமாகும்,

 மறுபுறம் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று சுவிஷ்லாந்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளமை  எமது நாட்டில் அந்த அமைப்பினால் ஏற்பட்ட விளைவுகளை அவமதிப்பதாகும்.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் விடுதலை புலிகள் அமைப்பு குறித்து  சுவிஸ் நீதிமன்றம்  இவ்வாறான தீர்ப்பினை வழங்கியுள்ளமைக்கும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும்...

2022-10-06 11:09:53
news-image

பால் தேநீர், தேநீரின் விலைகள் குறைப்பு!

2022-10-06 10:56:22
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரம் -...

2022-10-06 10:52:59