யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் நத்தார் ஒன்றுகூடல் இம்மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெஹிவளை கொன்கோட் ஹொட்டலில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் முன்னாள்  முதல்வர் அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் இவ் ஒன்றுகூடலில் கல்லூரியின் உப முதல்வர் அருட்தந்தை மகன் அலோஷியஸ் அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் உப அதிபர் திரு சில்வெஸ்ரர் சகாயராஜா அவர்கள் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிப்பர்.

இவ் விழாவில் பங்குகொள்ள விரும்பும் பழைய மாணவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர். 0771419103, 0777377381, 0777788127,0765480360, 0777800586