நீதி­மன்­றத்­திற்குத் தரப்­பாராகச் செல்­லாமல் ஒரு­வ­ரது வாழ்க்கை அமை­யு­மானால் அது போல் சிறந்த செயல் அவ­ரது வாழ்க்­கையில் வேறு ஒன்­று­மில்லை எனலாம். சிலர் நீதி­மன்றம் என்­றதும் இது ஏதோ பொல்­லாத இடம். அதற்குச் செல்­லாமல் இருந்தால் அதுவே தனது வாழ்வில் பெரும் கொடை­யாகும் என்று கூறு­வதை நாம் காணலாம்.

ஆயினும் இன்­றைய சமூக சூழ்­நி­லை­யிலும் வாழ்க்கை முறை­யிலும் ஆசை­களும் தேவை­களும் பெரு­கி­யுள்­ளதால் நீதி­மன்றம் செல்­ல­வேண்­டிய நிலையில் பலர் உள்­ளதை நாம் காணலாம். ஆகவே இன்று நீதி­மன்றம் கோவில்­க­ளுக்குச் சம­மாக உள்­ளது.

நீதி­மன்­றத்­திற்குச் செல்லும் ஒருவர் அங்கு பல வகை­யான வழக்­கு­களைக்  காணலாம். அவற்றில் ஒன்று சிவில் வழக்­காகும். சிவில் வழக்­குக்குச் செல்லும் ஒருவர் வெற்றி பெற்­றாலும் தோல்வி அடைந்­தா­லும மேன்­மு­றை­யீடு, மீளாய்வு, நீதி­மன்ற ஆணைகள் என்­பன போன்ற வழக்­கு­களை தொடர்ந்து நடத்­து­வ­தையும் நாம் காணலாம். ஒருவர் நீதி­யைப்­பெற்று வெளி­வ­ரு­வ­தற்கு காலக்­கெடு கிடை­யாது. பல ஆண்­டுகள் காத்­தி­ருக்­க­வேண்டும். இதனால் பணச்­செ­லவும் வழக்­கா­ளியும் வயதும் மற்­றைய தேவை­களும் உயர்ந்து கொண்டே இருக்கும். இத­னால்தான் சாதா­ர­ண­மாக மக்கள் கூறும் வாச­கங்­களில் ஒன்று என்­ன­வெனில் ‘கோடு ஏறு­பவன் நாள­டைவில் ஓடு (பிச்­சா­பாத்­திரம்) எடுக்­க­வேண்­டி­வரும்’ என்­ப­தாகும்.

நீதி என்­பது இறை­வனால் கிடைக்­கி­றது என்று சிலர் கூறு­வது உண்­மை­யா­யினும் அந்த நீதியைப் பெறு­வது இல­கு­வா­ன­தல்ல  என்­பதை உணர்­பவர் ஒரு போதும் கோடு ஏறு­வதை விரும்­பு­வ­தில்லை. ஆயினும் இன்­றைய சமூக சூழ்­நி­லையில் கோடு ஏறாமல் வாழ்க்­கையை நடத்­து­வதும் கஷ்டம் என்­பதை பெரும்­பா­லானோர் ஒத்துக்கொள்­கின்­றனர்.

இன்று நாம் பார்க்­கப்­போ­வது சிவில் நீதி­மன்றம் பற்­றிய சில நட­வ­டிக்­கை­க­ளே­யாகும்.

பகுதி 1

சிவில் வழக்கு ஒன்றில் ஈடு­ப­டப்­போகும் இருவர் முதலில் அறிந்­து­கொள்ள வேண்­டி­யது (Proxy) பதிலி எனப்­படும் பத்­திரம் பற்­றி­ய­தாகும்.

1) பதிலி என்ற பத்­தி­ரமே வழக்­கா­ளியால் அல்­லது எதி­ரா­ளியால் அல்­லது அவ் வழக்கில் சம்­பந்­தப்­படும் தரப்­பி­னரால் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருக்கு அவ்­வ­ழக்கில் தெரி­ப­டு­வ­தற்கு வழங்­கப்­படும் அதி­காரப் பத்­தி­ர­மாகும். இதனை ஆங்­கி­லத்தில் Proxy என்பர். நடை­மு­றையில் பதிலி என்­பதை விட புறக்சி என்­பதே மக்­க­ளி­டையே  பர­வ­லாக வழங்­கு­கி­றது. ஆகவே வழக்கில் சம்­பந்­தப்­படும் ஒருவர் முதலில் செய்ய வேண்­டி­யது சட்­டத்­த­ர­ணிக்கு Proxy ஐ வழங்­குவதாகும்.

2) இப்­ப­தி­லி­யா­னது முதன் நிலை சிவில் நீதி­மன்­றத்தில் இருந்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வரையும் வழக்­கிற்குத் தேவைப்­ப­டு­கி­றது.

3) இவ் ஆவணம் வழக்­கா­ளிக்கும் மனு­தா­ர­ருக்கும் எதி­ரா­ளிக்கும் பொறுப்­பா­ளிக்கும் மற்றும் வழக்கில் ஈடு­ப­டுவோர் சில­ருக்கும் தேவைப்­படும் ஓர்  ஆவ­ண­மாகும்.

4) தரப்பார் ஒரு சட்­டத்­த­ர­ணிக்கு பதி­லியைக் கைய­ளித்தால் அதன் விபரம் வழக்கின் பதி­வேட்டில் பதி­யப்­பட்டு விடும். பின்னர் இப் பதி­லியை ரத்துச் செய்­யாமல் புதிய ஒரு­வ­ருக்கு தரப்பார் பதி­லியை வழங்­க­மு­டி­யாது.

5) பதி­லியைப் பெற்ற ஒருவர் அவ்­வ­ழக்கின் முத­னிலை நீதி­மன்ற நட­வ­டிக்­கை­ளிலும் மேன்­மு­றை­யீட்­டுக்கும், மேன்­மு­றை­யீட்­டுக்­கான முன் அனு­ம­தியைப் பெறும் வழக்­கு­க­ளிலும் வாதா­டலாம்.

6) மீளாய்வு விண்­ணப்­ப­மானால் ((Revision) விரும்­பினால் வேறு ஒரு சட்­டத்­த­ர­ணிக்கு தரப்பார் பதி­லியை வழங்­கலாம்.

7) புறக்­சியை பெற்ற ஒரு சட்­டத்­த­ரணி தனது வழக்கை நடத்­து­வ­தற்கு வழக்­கு­ரைஞர் (Counsel) ஒரு­வரை அமர்த்­தலாம்.

8)     புறக்­சி­யா­னது சிங்­க­ளத்தில் அல்­லது தமிழில் அல்­லது ஆங்­கி­லத்தில்  வழங்­கப்­ப­டலாம்.

9) சிவில் வழக்கில் புறக்­சிக்கு முத்­திரை வரி செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

10) வழக்­கிற்குத் தேவை­யான ஆவ­ணங்­களை பதி­லியைப் பெற்ற சட்­டத்­த­ரணி மட்­டுமே கையொப்பம் இட்டு நீதி­மன்­றத்­திற்குச் சமர்ப்­பிக்­க­வேண்டும்.

11) ஒரு வழக்­கிற்கு பதிலி தேவையா? இல்­லையா? என்ற சந்­தேகம் ஏற்­படும் பட்­சத்தில் பதிலி ஒன்றை அணைப்­பதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.

12) ஒரு வழக்கில் சட்­டத்­த­ரணி ஒரு­வரின் பதிலி அணைத்­தி­ருக்­கும்­போது அதனை ரத்துச் செய்­யாமல் இன்­னு­மொரு சட்­டத்­த­ர­ணியின் புறக்­சியை அணைக்க நீதி­மன்றம் இடம்­கொ­டுப்­ப­தில்லை.

13) அட்­டனித் தத்­து­வக்­காரர் புறக்­சியை ஒரு வழக்­கிற்குக் கொடுக்­கும்­போது அப்­பு­றக்­சியில் சகல விப­ரங்­களும் அடங்­கி­யி­ருக்க வேண்டும்.

14) வழக்கின் தரப்பார் ஒரு சட்­டத்­த­ர­ணியின் புறக்­சியை மீளப்­பெ­றும்­போது அவ­ருக்குச் செலுத்­த­வேண்­டிய பணம் எதுவும் இருந்தால் அதனைச் செலுத்­திய  பின்­ன­ரேயே புதி­ய­வரின் புறக்­சியை அணைக்­க­வேண்டும்.

15) புறக்சி மீளப்­பெ­றப்­ப­டும்­போது நீதி­மன்­றத்தில் அது கட்­டாயம் தெரி­விக்­கப்­பட வேண்டும்.

16) சிவில் நட­வ­டிக்கை முறைச் சட்டக் கோவையின் எந்­த­வொரு  பிரிவும் சட்­டத்­த­ரணி தனது விருப்­பத்­தின்­படி புறக்­சியை மீளப்­பெ­றலாம் என்று கூறு­கிற பிரிவை நான் கண்­ட­தில்லை.

17) சில வேளை சட்­டத்­த­ரணி வேறு நாடு­க­ளுக்கு அல்­லது மாவட்­டங்­க­ளுக்குச் சென்று தொழில் புரி­யலாம் அத்­த­கைய  சந்­தர்ப்­பத்தில் வழக்கில்  புறக்­சியை வழங்­கி­யவர் சத்­திய உரை ஒன்றை வழங்கி புறக்­சியை வாபஸ்­பெறக் கேட்­கலாம்.

18) சில சந்­தர்ப்­பங்­களில் சட்­டத்­த­ரணி தனது நிய­ம­னத்தை மீளப்­பெ­று­வ­தானால் அதனை நீதி­மன்­றத்­திற்கும் தனது தரப்­புக்கும் தெரி­விக்­க­வேண்டும் அவ­ரது தரப்பு ஏற்­றுக்­கொண்டால் பிரச்­சினை எழாது.

19) புறக்சி ஒன்று மீளப் பெறப்­ப­டும்­பொ­ழுது வழக்­கிற்­கான புதிய திக­தியை நீதி­மன்றம் வழங்கும்.

20) சாதா­ர­ண­மாக நீதி­மன்றம் சட்­டத்­த­ரணி தவிர்க்க முடி­யாத கார­ணத்தால் புறக்­சியை மீளப்­பெற விரும்­பினால்  அதற்­கு­ரிய கார­ணத்தை கூறி புறக்­சியை மீளப்­பெற நீதி­மன்றம் இட­ம­ளிக்­கலாம்.

21) அட்­டனித் தத்­து­வக்­கா­ரரும் புறக்­சியை மீளப் பெறலாம்.

22) புறக்சி வழங்­கி­யவர் இறந்தால் அல்­லது சட்­டத்­த­ரணி இறந்தால் புறக்சி வலு­வி­ழந்­து­விடும்.

23) வழக்­கொன்றைப் பொறுத்­த­வரை புறக்சி  மிக முக்­கிய ஆவ­ண­மாகும். சரி­யான முறையில் புறக்­சியை மீளப்­பெ­றாமல் வழக்கை நடத்தி இருந்தால் தீர்ப்பு வழங்­கும்­போது சில பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம்.

பகுதி 2

சிவில் வழக்­கொன்றை நடத்­து வதற்கு அட்­ட­னித்­தத்­துவ பத்­திரம் வழங்­கு­வதும் ரத்துச் செய்­வதும் எப்­படி?

1902 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க அட்­ட­னித்­தத்­துவக் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் அட்­ட­னித்­தத்­துவம் பற்றி கூறப்­பட்­டுள்­ளது. 1902  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்த இக் கட்­டளைச் சட்டம் 1913  ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க திருத்தச் சட்­டத்தின் கீழும் 1933  ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க திருத்தச் சட்­டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க திருத்தச் சட்­டத்தின் கீழும் செய்­யப்­பட்ட திருத்­தங்­க­ளுடன் தற்­போது  அமுலில் உள்­ளது.

இச் சட்­டத்தின் இரண்டாம் பிரி­வின்­படி அட்­ட­னித்­தத்­துவப் பத்­திரம் என்­பது குறித்த ஒரு நப­ருக்கு வேறு ஒரு­நபர் தன் சார்பில் சில­வற்றைச் செய்ய அனு­ம­தி­ய­ளிக்கும் பத்­திரம் எனக்­கூ­றலாம். அட்­ட­னித்­துவம் பெற்­றவர் அட்­ட­னித்­தத்­து­வக்­காரர் என அழைக்­கப்­ப­டுவார்.

அட்­ட­னித்­தத்­துவப் பத்­திரம் சட்­ட ­பூர்­வ­மான காரி­யங்­களைச் செய்ய மட்­டுமே வழங்­கப்­ப­டு­கி­றது. பின்­வ­ரு­வன அவற்றுள் சில­வாகும். காணி­களை விற்­ப­தற்கு, வாங்­கு­வ­தற்கு மாற்­றீடு செய்­வ­தற்கு, வாட­கைக்கு கொடுக்க, குத்­த­கைக்கு கொடுக்க, வர்த்­தக விட­யங்­களை கவ­னிக்க, அரச திணைக்­க­ளங்கள்– கூட்டுத் தாப­னங்கள்– அதி­கார சபை­களில் தோன்ற, நீதி­மன்­றத்தில் தோன்ற, வங்கிக் கணக்­குகள் இருப்பின் அவற்றை தொடர்ந்து பேணி­வர இவை போன்­ற­வற்­றுக்கு ஒருவர் இன்­னு­மொ­ரு­வ­ருக்கு அட்­டனித் தத்­து­வத்தை வழங்­கலாம்.

அட்­ட­னித்­தத்­துவம் சம்­பந்­த­மாக நீதி­மன்­றங்கள் சில மட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன. அதில் முக்­கி­ய­மா­னது என்­ன­வெனில் அட்­ட­னித்­தத்­து­வத்தை வழங்­கு­ப­வரும் அட்­ட­னித்­தத்­து­வக்­கா­ரரும் ஒரே நீதி­மன்ற நியா­யாய எல்­லைக்குள் வசித்தால் அட்­ட­னித்­தத்­து­வக்­காரர் அந்த வழக்கில் அட்­டனித் தத்­து­வத்தை வழங்­கி­ய­வ­ருக்­காக வழக்கில் தோன்­ற­மு­டி­யாது என்­றாகும்.

அதேபோல் விவா­க­ரத்து வழக்­கு­களில் அட்­ட­னித்­தத்­து­வத்தின் கீழ் விவா­க­ரத்தை பெற­மு­டி­யாது. கணவர் சார்பில் அவ­ரது அட்­டனித் தத்­து­வக்­கா­ரரும் மனைவி சார்பில் அவ­ளது அட்­ட­னித்­தத்­து­வக்­கா­ரரும் சாட்­சியம் சொல்லி விவா­க­ரத்தைப் பெற­மு­டி­யாது.

இவ்­வாறு அட்­ட­னித்­தத்­து­வத்தின் கீழ் கட்­டுப்­பா­டுகள் இருப்­பினும் அவற்றை கவ­னி­யாது பலர் விவா­க­ரத்து வழக்கை தாக்கல் செய்­வதும் உண்டு. வழக்கை தாக்கல் செய்­யலாம். ஆனால் விவா­க­ரத்து சட்­டப்­படி கிடைக்­காது.

அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­திரம் பொது­வான (General Power of Attorney)  அட்­டனித் தத்­து­வ­மா­கவும் விசேட (Special Power of Attorney)அட்­ட­னித்­தத்­து­வ­மா­கவும் வழங்­கலாம். விசேட அட்­ட­னித்­தத்­துவம் விசேட காரி­யா­ல­யங்­க­ளுக்­காக வழங்­கப்­ப­டு­கி­றது.  இவ்­வி­ட­யத்தில் ஒரு சுவை­யான வழக்­கெ­ழு­கா­ரணம் ஒன்று பிர­பல சட்­டத்­த­ர­ணியால் எழுப்­பப்­பட்­டதை அறி­வுக்­கா­கவும் ஆலோ­ச­னைக்­கா­கவும் சமர்ப்­பிக்க விரும்­பு­கிறேன்.

இது சிந்­திக்கக் கூடிய ஒரு பிரச்­சினை என்­பதால் சக­ல­ருக்கும் பிர­யோ­ச­ன­மா­கவும் இருக்கும்.

பிரச்­சினை இதுதான். காணி­யொன்றின் உரித்து யாருக்குச் சொந்­த­மா­கி­றது என்ற வழக்கு உரித்து நிறுவல் வழக்கு என அழைக்­கப்­ப­டு­கி­றது. உரித்து நிறுவல் வழக்கு முக்­கி­ய­மாக நிரூ­பிக்­கப்­பட வேண்­டி­யது, உரித்­தா­னது சங்­கிலித் தொடர்போல் அறு­ப­டாமல் உரித்­தா­ள­ருக்கு வந்­தது அல்­லது வந்து அடைந்­துள்­ளது என்­பதை அவர் நிரூ­பிக்­க­வேண்டும். அதற்கு அவர் அக்­கா­ணியின் ஆரம்­ப­கால சொந்­தக்­காரர் யார் என்றும் அந்த உறு­தியை மாற்­றிய நொத்­தா­ரிசின் பெயர் உறுதி இலக்கம் என்­பன பற்­றிய விப­ரங்­க­ளுடன்  அவ­ரி­ட­மி­ருந்து  வேறு  ஒரு­வ­ருக்குச் சென்­றி­ருந்தால் அது­பற்­றிய  விபரம் அதன் பின் உரித்து மாற்றம் நடை­பெற்­றி­ருந்தால் அது பற்­றிய விபரம் எல்­லா­வற்­றையும் காட்டும். (Title report) உரித்துப் பட்­டி­யலைக் காட்­ட­வேண்டும்.

இவ்­வாறு உரித்து பட்­டி­யலைக் காட்­டும்­போது உண்­மை­யான உரித்­தா­ளர்­களே ஏனை­ய­வர்­க­ளுக்கு விற்­கிறார் என்­பதைக் காட்­ட­வேண்டும். உண்­மை­யாக உரித்­தா­ளர்கள் இல்­லாமல் வேறு யாரும் உரித்தை மாற்றி இருந்தால் அங்கு சங்­கி­லிக்­கோர்வை உடை­வதைப் போல் உரித்துப் பட்­டியல் உடையந்­தி­ருக்கும். இதனால் உரித்து நிறுவல் வழக்கு பிரச்­சி­னைக்­குள்­ளா­கலாம்.

உரித்து உடைந்த நேரத்தில் இருந்து 10 வரு­டத்­திற்கு மேல் இன்­னு­மொ­ருவர் ஏதோ வழியில் அக்­கா­ணியை உடைமையைகொண்­டி­ருந்தால் ஆட்­சி­யு­ரி­மையால் அக்­காணி அவ­ருக்குச் செல்லும். ஆகவே உரித்து நிறுவல் வழக்கில் உரித்­தா­னது உரித்­தாளர் ஒரு­வ­ரிடம் இருந்தே மற்­றை­ய­வ­ருக்கு மாற்­றப்­பட­வேண்டும்.

இவ்­வி­டத்­தில்தான் முக்­கி­ய­மான பிரச்­சினை எழு­கி­றது. உரித்­தாளர் ஒருவர் வெளி­நாட்டில் இருக்­கிறார். அவர் அட்­ட­னித்­தத்­து­வத்தை ஒரு­வ­ருக்கு வழங்கி அந்த அட்­ட­னித்­தத்­து­வக்­காரர் உரித்தை மாற்­றினால் அந்த அட்­ட­னித்­தத்­து­வக்­கா­ரரை உரித்­தாளர் என்று கொள்­ள­லாமா? இன்­னு­மொரு கேள்வி, உரித்து நிறுவல் வழக்­கிற்கு அந்த சட்­டத்­த­ர­ணியால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட மாற்றல் உறுதி உரித்­தாளர் ஒரு­வரால் உரித்து மாற்றம் செய்­யப்­பட்ட உறுதி என்று கொள்­ள­லாமா? என்று வினா எழும். இது பற்றி தாஜுதீன் வழக்கில் எழுந்­தது.

எனது சொந்தக் கருத்து முடி­யாது என்­ப­தாகும். இந்த விப­ரத்தை நாம் எழு­தி­யது அட்­ட­னித்­தத்­து­வக்­காரர் எல்லா விட­யங்­க­ளையும் செய்­ய­மு­டி­யாது. ஆகவே காணியின்  உரித்தை மாற்­றலாம் என  எடுத்­துக்­கொண்டால் மிகப்­பெ­ரிய பாதிப்பு ஏற்­படும் என்­பதைக் காட்­ட­வேயாம். நீங்­களும் இதனை சிந்­தித்துப் பாருங்கள். அட்­ட­னித்­தத்­துவப் பத்­தி­ரத்தின் கீழ் செய்ய முடி­யா­தவை பல­வுண்டு. விவாகம் செய்ய முடி­யாது. குழந்தை ஒன்றை விற்­க­மு­டி­யாது. அதேபோல் காணி­யையும் விற்­க­முடி­யாது என்று  கூறினால் அது பிழை என்று காட்ட சரி­யான கார­ணங்­களை வழங்க வேண்டும். குற்­ற­வியல் வழக்­கு­க­ளுக்கு அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­தி­ரத்தை சந்­தேக நபர் ஒருவர் வேறு ஒரு­வ­ருக்குக் கொடுத்து வழக்கை நடத்தி வழக்கை வெற்­றி­பெற முடி­யுமா? என சிந்­திக்க வேண்டும். ஆகவே அட்­டனித் தத்­து­வக்­காரர் மாற்­று­வதும் உரித்­தாளர் மாற்­று­வதும் ஒரே மாதி­ரி­யா­னதா? என்று சிந்­திக்க வேண்டும்.

அட்­ட­னித்­தத்­துவப்­பத்­திரம் ஒன்றை நிறை­வேற்­றுதல் பற்றி அறிய வேண்­டி­யது

இதில் அறிய வேண்­டி­யது வெளி­நாட்டு அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­திரம் பற்­றி­ய­தாகும். வெளி­நாட்டில் உள்ள ஒருவர் உள்­நாட்­டுக்கு அட்­ட­னித்­தத்­துவப் பத்­திரம் ஒன்றை அனுப்­ப­வேண்­டு­மானால் அப்­பத்­தி­ரத்தை அந்­நாட்டுச் சட்­டத்­தரணி ஒருவர் முன்­னி­லை­யிலும் சாட்­சிகள் முன்­னி­லை­யிலும் தயா­ரித்து அந்­நாட்டு வெளி­வி­வ­கார அமைச்­சுக்குச் சமர்ப்­பிக்க வேண்டும். வெளி­நாட்டு அமைச்சு அந்த அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­தி­ர­மா­னது சட்­டத்­தின்­படி ஏற்­கக்­கூ­டி­யது என்றும் அதில் கையொப்பம் வைத்­துள்ள சட்­டத்­த­ரணி தற்­போதும் வழக்­க­றி­ஞ­ராகச் செயல்­ப­டுத்­து­கிறார் என்­ப­தையும் உறு­திப்­ப­டுத்தி கையொப்பம் இட­வேண்டும். அந்த அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­தி­ரத்­தையே இலங்­கைக்கு அனுப்­ப­வேண்டும்.

இலங்­கை­யி­லி­ருந்து வெளி­நாட்­டுக்கு ஒருவர் அட்­ட­னித்­தத்­து­வத்தைக் கொடுக்­கும்­போதும் அப்­ப­டியே செய்­ய­வேண்டும். ஆனால் நடை­மு­றையில் அப்­படி நடை­பெ­று­வது குறைவு. பாஷைப் பிரச்­சி­னையே இதற்குக் காரணம் என்று சிலர் கூறு­வதை நான் கேட்­ட­துண்டு.

அட்­ட­னித்­தத்­து­வத்தை பதிவு செய்யும் முறை

அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­திரம் முன்னர் இலங்கை காணிப்­ப­தி­வாளர் நாய­கத்தின் காரி­யா­ல­யத்­தி­லேயே பதி­யப்­பட்டு வந்­தது. தற்­போது மாவட்­டங்­களில் உள்ள காணிக்­கிளைக் காரி­யா­ல­யங்­க­ளிலும் பதி­யப்­ப­டு­கி­றது.

அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­திரம் ஒன்று பதிவு செய்­யப்­ப­டா­விட்டால் நீதி­மன்­றத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­திரம் 7 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்­வது பிர­யோ­ச­மா­னது.

அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­தி­ரத்தை பதி­வு­செய்ய வேண்­டு­மானால் மூலப் பிர­தி­யையும் மூலப்­பி­ர­தி­யி­லி­ருந்து போட்டோ பண்­ணப்­பட்ட பிரதி ஒன்­றையும் (True copy) எடுத்து உண்மைப் பிர­தி­யென அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மூலப் பிர­திக்கு முத்­திரை ஒட்­டப்­பட்­டி­ருக்க வேண்டும்.

அட்­ட­னித்­தத்­து­வத்தைப் பெற்­றவர் இவ் அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­திரம் உண்­மை­யா­னது என்று கூறி சத்­தியக் கட­தாசி ஒன்­றையும் அணைக்க வேண்டும்.

பதிவுக் கட்­ட­ணமும் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

மேலே­யுள்ள முறையில் பதி­வாளர் நாயகக் காரி­யா­ல­யத்தில் அல்­லது கிளை காணிப்­ப­திவுக் காரி­யா­ல­யங்­களில் கைய­ளிக்­கப்­பட்ட அட்­ட­னித்­தத்­துவப் பத்­திரம் பதிவு செய்­யப்­பட்டு அதற்­கு­ரிய ஒரு இலக்­கத்­தையும் அதன் திக­தி­யையும் கொண்­ட­தாக பின்னர் அப்­பத்­திரம் பாரம் கொடுத்­த­வ­ருக்கு திருப்பிக் கொடுக்­கப்­படும்.

அட்­ட­னித்­தத்­து­வப்­பத்­தி­ரத்தை தேவை­யற்­ற­போது ரத்­துச்­செய்­யலாம். அட்­ட­னித்­தத்­துப்­பத்­தி­ரத்தை வழங்­கி­யவர் அல்­லது பெற்­றவர் அதனை ரத்துச் செய்­யலாம்.

ரத்துச்செய்ய வேண்டுமானால் பதிவு செய்யப்பட்ட மூலப் பிரதியுடன் அதனை  ரத்துச் செய்வதற்கான காரணத்தையும் சத்திய உரையொன்றையும் பதிவாளர் நாயகத்தின் காரியாலயத்தில் சமர்ப்பித்து ரத்துச்செய்யலாம்.

அட்டனித்தத்துவப்பத்திரம் ரத்துச் செய்தல் பற்றிய தகவலை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கவேண்டும். அத்துடன் கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய தினசரி பத்திரிகைகளிலும் அது ரத்துச் செய்தல் பற்றிய அறிவித்தலைப் பிரசுரிக்கவேண்டும். அதன் பின்னரே அட்டனித்தத்துவப்பத்திரம் ரத்துச்செய்யப்படும்.

ரத்துச்செய்யப்படுவதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் அப்பத்திரத்தின் கீழ் செய்யப்பட்ட கருமங்களில் சகலதும் செல்லுபடியாகும்.

மேலேயுள்ள முறையில் அட்டனி ்தத்துவப்பத்திரம் தயாரிக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டு ரத்துச் செய்யப்படுகிறது.

மேற்கூறியவை சட்டத்தின் பாற்பட்ட விதிகளாகும்.

தொகுப்புரை

சிவில் வழக்குகளில்  கட்டாயம் பதிலி (Proxy) அணைக்கப்பட வேண்டும். ஆகவே அது பற்றிய சகல விபரங்களையும் அடக்கி இக்கட்டுரையின் முதலாவது பகுதியும் பின்னர் அட்டனி ்தத்துவப்பத்திரத்தைப் பற்றிய இரண்டாவது பகுதியும் எழுதப்பட்டுள்ளது.  பலருக்கு Proxy என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை. வழக்கிற்குத் தேவையான ஒரு ஆவணம் என்றே நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு என்றும் பரிபூரண விளக்கத்தை அவர்கள் அறியவேண்டுமென்பதை கருத்தில்கொண்டு இப் Proxy என்ற பகுதி எழுதப்பட்டுள்ளது.

இரண்டாவது பகுதி அட்டனி ்தத்துவம் பற்றிய சகலரும் அறிந்திருக்க வேண்டியது. அட்டனித்தத்துவத்தில் வழங்க முடியாதவை எவை என்பது பற்றியும் அது பதிவுசெய்யப்படும் முறைபற்றியும் ரத்துச்செய்யும்  முறை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு பிரயோசனமானது.

- கே.ஜீ.ஜோன்