நவ்று மற்றும் மனஸ் தடுப்பு முகாமில்  உள்ள அகதிகள்  மற்றும் குடியேற்றவாசிகளில் நோய்வாய்ப்பட்டவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கான மருத்துவர்களின் உரிமையை அவுஸ்திரேலிய அரசாங்கம் இரத்துச்செய்துள்ளது.

தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளின் உடல்நிலை  பாதிக்கப்பட்டால் அவர்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுப்புவதற்கான உரிமையை மருத்துவர்களிற்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வழங்கியிருந்தனர்.

கடந்த மே மாதம் பிரதமர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இந்த உரிமையை இரத்துச்செய்வேன் என ஸ்கொட்மொறிசன்  தெரிவித்திருந்தார்.

இது குறித்து பல மாதங்கள் நீடித்த பேச்சுவார்த்தைகளி;ன் பின்னர்  இன்று  தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளின் உடல்நிலை  பாதிக்கப்பட்டால் அவர்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுப்புவதற்கு மருத்துவர்களிற்கு  வழங்கப்பட்ட  உரிமையைஇரத்துச்செய்யும் பிரேரணையை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 37 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் கிடைத்துள்ளன.

மேடெவெக் பில் என அழைக்கப்படும் சட்ட மூலம் கடந்த பெப்ரவரியில் நடைமுறைக்கு வந்த பின்னர் 179 அகதிகள்  அவுஸ்திரேலியாவிற்குள் மருத்துவகிசிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.