பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் ஆறு வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,

நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயது சிறுவன். நான் அரைவாசி பிரித்தானியாவைச் சேர்ந்தவனும் மிகுதி அரைவாசி இலங்கையை சேர்ந்தவனும் ஆவேன். ஆனால், 100 சதவீத அன்பு இலங்கை மீது உள்ளது. உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களை பற்றி எனது அம்மா சொல்லி இருக்கிறார்.

உங்களிடம் ஒரு முக்கியமான விடயம் பற்றி தெரிவிக்கின்றேன். எமது சுற்றுச்சுழலுக்கு நீங்கள்  மிகப்பெரிய முன்னுரிமை கொடுங்கள், எங்களின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது.

இலங்கையிலுள்ள அழகிய கடல் மற்றும் கடற்கரைகளை பாதுகாக்க செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஆமைகள் வருடம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பதோடு இலங்கை கடற்கரைக்கு வந்து சேரும் என குறித்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டள்ளதாவது,

இன்று காலை எனக்கு கிடைத்த கடிதத்திற்கு 6 வயது அப்துல்லா அபுபைத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இது எனக்கு உந்துதலையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மற்றும் பழைய தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளையோரிடம் இருக்கும் பொறுப்பை நினைவூட்டியது. ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன், உங்களுக்கு  எனது வாழ்த்துக்கள் என தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.