ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நாட்டில் நில­விய சுதந்­தி­ர­மான நிலை  தற்­போது இல்லை என்று குறிப்­பிட்ட தேசிய மக்கள் பேரவை ஏற்­பாட்­டாளர் சமீர பெரேரா தற்­போது நடை­பெறும் விட­யங்­களை உற்­று­நோக்கும் போது சுதந்­தி­ர­மான நிலைமை   இல்­லாமல் போயுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜன­நா­யக தேசிய அமைப்­பி­னரால்   நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது அதில் சட்­டத்­த­ரணி நியூட்டன் பெரேரா, அரசு தொழிலார் சங்­கத்தின் தலைவர் டி.எம்.டி அபே­ரத்ன ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்

இங்கு உரை­யாற்­றிய தேசிய மக்கள் பேரவை ஏற்­பாட்­டாளர் சமீர பெரேரா,  

2015ஆம் ஆண்­டுக்கு பின்னர் ஊட­கத்­துறை சுதந்­தி­ர­மாக செயற்­பட்­டது ஆனால் ஜான­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்து சில நாட்­களே ஆன நிலையில் நாட்டில் பல­்வே­று­பட்ட மாற்­றங்கள் நிகழ்ந்­துள்­ளன. அதில் நல்ல  மாற்­றங்­களும் உள்­ளன சுதந்­தி­ரத்­தினை பாதிக்கும் மாற்­றங்­களும் உள்­ளன. ஊட­கத்­துறை சார்ந்­த­வர்­களை இர­க­சிய பொலிஸ் மற்றும் இரக­சிய பொலிஸார் மூலம் பல­ம­ணி­நேர விசா­ர­ணை­க­ளுக்கு  உற்­ப­டுத்தி உள்­ளனர்.

மற்றும் சுவிஸ் தூத­ரக ஊழியர் கடத்தல் விவ­கா­ரமும் நாட்டின் அப­கீர்த்­திக்கு வித்­தி­டு­வ­தாக அமைந்­துள்­ளது. நாட்டில் சுதந்­தி­ரத்­தினை கருத்தில் கொண்டு வாக்­க­ளித்து புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்த மக்கள் நாட்டின் நற்பெய­ருக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை பொறுத்துக் கொள்ள மாட்­டார்கள்.

நாட்டின் ஊட­கத்­து­றைக்கு இவ்­வா­றான அடக்­கு­மு­றைகள் பிர­யோ­கிப்­பது நாட்டில் சுதந்­திர தன்மை இருப்­பதை சந்­தே­கத்­திற்­குள்­ளாக்­கு­கி­றது, ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யிட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் கடந்த வாரம் பொலிஸாரின் அதி­காரம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு திடீ­ரென மாற்­றப்­பட்­டி­ருந்­தது. பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாட்டில் இரா­ணு­வத்­தி­னரே ஈடு­ப­டுத்­தப்­பட உள்­ளனர். பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தி­னரை சுதந்­தி­ர­மாக செயற்­பட  வழி  வகுக்கும் போதுதான்  நாட்டில் சுதந்­திரம் நிலவும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் கடந்த அர­சாங்­கத்­துக்கு பல்­வே­று­பட்ட சவால் கள் காணப்­பட்­டன. அதனை முன் னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால மற்றும் முன்னாள் பிர­தமர் ரணில், பாது­காப்பு செய­லா­ளர் ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என கூறப்­பட்­டன.

கடந்த அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்­திகள் நாட்­டுக்கு தீங்­கா­னவை என  தற்­போ­தைய அர­சாங்கம் குறிப்­பிடும் போதும் அதன் தொடர்­சி­யையே முன்­னெ­டுத்து செல்ல வேண்­டிய நிலையில் உள்­ளனர். பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சீரு­டைக்­கான வவுச்சர் வழங்­கு­வது மாண­வர்­க­ளுக்கு கஷ்­ட­மான விடயம் என்று நடப்பு அர­சாங்­கத்தில் முன்­ன­தாக குறிப்­பிடப்பட்­டி­ருந்­த­போதும் உயர்­கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன வவுச்சர் வழங்கும் திட்­டத்தை   முன்­னெ­டுத்து செல்வோம் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எம்.சி.சி. ஒப்­பந்­தங்கள் நாட்டின் தீமை க்கு வழி­வ­குக்கும் என்று மக்கள் மத்­தியில் தக­வல்­களை பரப்பி மக்­களை அதற்கு எதி­ராக திசை­தி­ருப்பி விட்­டனர். ஐக்­கிய தேசிய கட்­சியின் மூலம் மக்­க­ளுக்கு அதன் நன்­மை­களை விளக்­க­ம­ளிப்­ப­தற்கு எவரும் முன்­வந்­தி­ருக்­க­வில்லை. ஜான­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச தோல்­வியை தழு­வு­வ­தற்கு இதுவும் ஒரு கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது. தேர்தல் தோல்­வியில் சஜித்தின்  தோல்­வி­யாக இதனை கருத முடி­யாது. அவ­ருக்கு வாக்­க­ளித்த அனைத்து மக்­களின் மற்றும் கட்சி உறுப்­பி­னர்­களின் தோல்­வி­யா­கவே கருத்தில் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நாட்­டுக்கு தீங்கு விளை­விக்கும் ஒப்­பந்தம் என்று எம்.சி.சி ஒப்­பந்­தத்தின் மூலம் கிடைக்­க­வி­ருந்த கட­னற்ற 480 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதியை இல்­லாமல் செய்­து­விட்டு  ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் தனது முதல் பய­ணத்தில் இந்­தி­யா­வுக்கு சென்ற ஜனா­தி­பதி 400 மில்­லியன் அமெ­ரிக்க ெடாலர் கடனை பெற்­றுள்ளார். மற்றும் புல­னாய்வு துறை­யினை சக்­தி­மிக்­க­தாக்­கு­வ­தற்கு 50 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை கட­னாக பெற்­றுள்ளார். அமெ­ரிக்கா வழங்­கு­வ­தாக கூறிய கட­னற்ற நிதியை தவிர்த்­து­விட்டு இந்தியாவில் கடனை பெற்று நாட்டுக்கு நன்மை செய் வதாக  தெரிவிக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிலைப்படுத்தியே   அபிவிருத்திகளை மேற்கொள்ளவதாக சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என தெரிய வில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக் கள் தங்களுக்கு மேலும் சுதந்திரம் மற் றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ள னர்.