(இரா­ஜ­துரை ஹஷான்)

எதிர்க்­கட்சி தலைவர் விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர், சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் ஆகியோர் இவ்­வா­ரத்­துக்குள் சிறந்த தீர்வை முன்­வைக்­கா­விடின் அர­சியல் ரீதியில் மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் செயற்­பா­டுகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­ யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கை யில்,

சுயா­தீ­னப்­ப­டுத்­தப்­பட்ட பொலிஸ் ஆணைக்­குழு, மற்றும் புல­னாய்வு பிரி­வினர் இன்று அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். பொலி­ஸாரின் செயற்­பா­டுகள் முறை­யற்ற விதத்தில் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன. மறு­புறம்   புல­னாய்வு பிரிவின் அதி­கா­ரிகள் அர­சியல்  பழி­வாங்­க­ளுக்­காக பொருத்­த­மற்ற  பத­வி­களில் அமர்த்­தப்­பட்­டுள்­ளார்கள். சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து இன்று பல கேள்வி நிலை எழுந்­துள்­ளது. கடந்த அர­சாங்­கத்தில் அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக இந்­நி­று­வ­னங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களே முன்­வைக்­கப்­பட்­டன.

எதிர்க்­கட்சி தலைவர் பதவி குறித்து தற் ­போது மீண்டும் தேவை­யற்ற பேச்­சு­வார்த்­தைகள் மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.  கட்­சியின் பெரும்­பான்மை தரப்­பி­ன­ரது  கருத்­துக்­க­ளுக்கு   முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். இவ்­வார காலத்­துக்குள் இதற்கு ஒரு தீர்வு  மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு அமைய கிடைக்­கா­விடின் அர­சியல் ரீதியில் மாறு­பட்ட  தீர்­மா­னங்­களை முன்­னெ­டுப்போம் என்றார்.  

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்­பி­டு­கையில்,

இடம் பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில்  அர­சியல் ரீதியில் மக்கள் கற்றுக் கொடுத்த பாடத்­தையும், பெரும்­பா­லான மக்­களின் அர­சியல் தீர்­வையும் கருத்திற் கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியின் அடுத்­த ­கட்ட செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டுமே தவிர முரண்­பட்டுக் கொண்டு இருத்தல் ஆகாது.

தவ­று­களை திருத்திக் கொண்டு  சிறந்த அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து செல்­வ­தற்­கா­கவே எதிர்க்­கட்சி தலைவர், ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பத­வியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவுக்கு வழங்க வேண்டும் என்று கோரு­கின்றோம். இதற்கு கட்­சியின் முக் கிய தரப்­பி­னர்கள் இட­ம­ளித்து ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் மீது   போலி­யான பல குற்­றச்­சாட்­டுக்கள் அர­சியல் தேவை­க­ளுக்­காக சுமத்­தப்­பட்­டுள்­ளன.  அதனை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நீக்க முடி­யாமல் போனது. அதற்கு ஜனா­தி­பதி வேட்பாள­ராக போட்­டி­யிட்ட  சஜித் பிரே­ம­தாச பொறுப்­பாளி அல்ல. ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களில் முறை­யான மாற்­றங்­களை முன்­னெ­டுக்­காமல், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை ஒருபோதும் முன்னெடுத்து செல்ல முடியாது. தவறு களை திருத்திக் கொள்ளாவிடின் கட்சி மேலும் பலவீனமடையும். கட்சி இன்று எதிர் கொண்டுள்ள சவால்கள் குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக் கும் தரப்பினர்கள் கவனம் செலுத்த வேண் டும் என்றார்.