யாழ்ப்பாணம் கல்வியங்காடு விநாயகர் வீதியில் இன்று மதியம் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழு ஒன்று வெட்டுக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரை வீதியோரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளது.

இதையடுத்து படுகாயம் அடைந்த இளைஞரை மீட்ட கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயன்மார் கட்டுப் பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றுக்கும் கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றும் இடையில் இடம்பெற்றுவந்த குழு மோதலின் தொடராகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் கல்வியங்காடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.